காலை 8 மணி ராம் தன் Rx100ஐ எடுத்துக்கொண்டு ஆரப்பாளையம் நோக்கி புறப்பட்டான் அங்கு சென்று அருண் குமாரை சந்தித்தான் இருவரும் coffee அருந்தினர். அருண் ராமிடம் தான் கொண்டு வந்த கடிதத்தை வழங்கினான்.. ராம் அதை படித்துவிட்டு தான் கொண்டுவந்த பையில் வைத்துக்கொண்டான்."Ok Arun..Thank you".... " ok da carry on" இருவரும் அங்கிருந்து அகன்றனர்...ராம் அருகில் இருந்த பங்கில் petrol நிரப்பிக்கொண்டு சோழவந்தான் சாலையில் வண்டியை செலுத்தினான்...நகரத்தை விட்டு வெளியே வந்தவுடன் சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு தன் mobilil music player on செய்துவிட்டு மீண்டும் வண்டியை செலுத்த ஆரம்பித்தான் இளையராஜா இசைக்க ஆரம்பித்தார்... போன வாரம் பெய்த திடீர் மழையினால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உழவு வேலைகளில் தீவிரமாக இறங்கி வேலைபார்த்துக் கொண்டிருந்தனர்...அந்த மண்வாசனையும்...இந்த இளையராஜா இசையும் ஒருவித புத்துணர்ச்சியை அவனுள் உண்டு பண்ணின அது அவன் தன் வண்டியை செலுத்தும் விதத்திலேயே தெரிந்தது... சோழவந்தானுக்கு முன்னாள் மேலக்கல் பிரிவில் வைகை ஆற்றுப் பாலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு ஆற்றில் நீ...