சத்தமிடாத தோட்டாக்கள்....

காலை 8 மணி ராம் தன் Rx100ஐ எடுத்துக்கொண்டு ஆரப்பாளையம் நோக்கி புறப்பட்டான் அங்கு சென்று அருண் குமாரை சந்தித்தான் இருவரும் coffee அருந்தினர். அருண் ராமிடம் தான் கொண்டு வந்த கடிதத்தை வழங்கினான்.. ராம் அதை படித்துவிட்டு தான் கொண்டுவந்த பையில் வைத்துக்கொண்டான்."Ok Arun..Thank you".... " ok da carry on" இருவரும் அங்கிருந்து அகன்றனர்...ராம் அருகில் இருந்த பங்கில் petrol நிரப்பிக்கொண்டு சோழவந்தான் சாலையில் வண்டியை செலுத்தினான்...நகரத்தை விட்டு வெளியே வந்தவுடன் சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு தன் mobilil music player on செய்துவிட்டு மீண்டும் வண்டியை செலுத்த ஆரம்பித்தான் இளையராஜா இசைக்க ஆரம்பித்தார்... போன வாரம் பெய்த திடீர் மழையினால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உழவு வேலைகளில் தீவிரமாக இறங்கி வேலைபார்த்துக் கொண்டிருந்தனர்...அந்த மண்வாசனையும்...இந்த இளையராஜா இசையும் ஒருவித புத்துணர்ச்சியை அவனுள் உண்டு பண்ணின அது அவன் தன் வண்டியை செலுத்தும் விதத்திலேயே தெரிந்தது...
சோழவந்தானுக்கு முன்னாள் மேலக்கல் பிரிவில் வைகை ஆற்றுப் பாலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு ஆற்றில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீரை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்...ஒரு black colour Scorpio அசுர வேகத்தில் அப்பாலத்தைக் கடந்து சென்றது..."ஒருநாள் இந்த பாலத்திலேயே அடிபட்டு சாகபோறான் பாரு" என்று குரல் வந்த திசையை நோக்கினான் ராம்.. ஒரு வயதான முதியவர்.." தம்பி bus ஏதும் வரல கொஞ்சம் ஐந்தாங்கரைல என்னை இறக்கி விடுறியாப்பா.." என்று பரிதாபமாக கேட்க "உட்காருங்க தாத்தா போகலாம்" என்று ஏற்றிக்கொண்டான் " எவனோ செத்துட்டானாம் அதுனால bus ஓடாதாம்" என்று புலம்பியவாறே வந்த பெரியவரிடம் " யார் தாத்தா செத்துட்டாங்க" என்று ராம் கேட்க.." அவரு பேரு மங்களநாதராம் அந்த கால ஜமீன் குடும்பம். .இந்த ஏரியாவின் அடிப்படை தேவைகளுக்காகவும்...தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பிரச்சனைகளுக்காகவும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவாராம்...போன வாரம் நாகமலை பக்கத்துல அனுமதி பெறாமல் கிரானைட் கற்களை வெட்டிக் கடத்த முயன்றவங்களை மதுரை கலெக்டர்ட மாட்டிவிட்டுட்டாராம்...அதுல கடுப்பாகி போன எதிர் பார்ட்டி அவர் மதுரை போயிட்டு திரும்பி வரும்போது கழுத்தறுத்து மேலக்கல் ஆத்துப்பாலம் மேல போட்டுட்டு போய்ட்டாய்ங்க..." உடனே ராம் " எங்க தாத்தா நான் நின்றுகொண்டு இருந்த இடத்திலயா" என்று கேட்க "ஆமப்பா.." என்ற தாத்தா "கொஞ்சம் வண்டியை நிப்பாட்டுப்பா ஊரு வந்துருச்சு" என்று இறங்கிக்கொண்டார்.." பாத்து போப்பா" என்று அந்த தாத்தா சொல்ல சரி என்று பிரம்மை பிடித்தவன போல தலையை ஆட்டிவிட்டு வண்டியை செலுத்தினான்...கருப்பம்பட்டி பிரிவில் வண்டியை நிறுத்தி அங்கிருந்த டீ கடையில் ஒரு காப்பி போட சொல்லி அன்றைய நாளிதழை புறட்ட ஆரம்பித்தான்...அன்று அங்கு பேருந்துகள் ஏதும் ஓடாததால் ஆள் நடமாட்டமில்லாமல் சாலைகள் காட்சியளித்தன கடையிலும் மாஸ்டர் ஒருவர் மட்டுமே இருந்தார்..."சார் காப்பி எடுத்துக்கங்க"..காப்பியை பருக ஆரம்பித்தான் ராம்..அதே கருப்பு நிற Scorpio car இம்முறை அந்தக் கடை அருகே வந்து நிற்க டீ மாஸ்டர் வேகமாக வந்த கார் அருகே சென்றார் காரில் இருந்த இரண்டு பேரும் வெளியே இறங்கி டீ மாஸ்டரிடம் ஏதோ பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர்..ராம் தான் கொண்டுவந்த பையினுல் வைத்திருந்த silencer பொறுத்திய pistolஐ எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் டீ மாஸ்டரை காலிலும் மற்ற இருவரையும் தலையிலும் சுட "தோட்டாக்கள் சத்தமின்றி துளைத்தேறின"....அங்கிருந்து உடனே திரும்பிய ராம் நேராக மதுரை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகம் சென்று pistolஐ handover செய்தான்...தன்னுடைய 25 வது encounterஐ வெற்றிகரமாக நடத்திய ராமச்சந்திராக்கு பாராட்டு விழா நடந்தேறியது....
குறிப்புகள்:
1. இங்கு அருண் ராமிடம் கொடுத்தது மங்களநாதர் உள்ளிட்ட பல்வேறு கொலைகளில் தொடர்புடைய இரு நபர்களுக்கான encounter order.
2. ராம் கேட்டது இளையராஜா பாடல்கள் அல்ல..குற்றவாளிகளின் இருப்பிடம் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பான உழவுத்துறையின் updates.
3. ராம் மேலக்கல் பிரிவு ஆற்றுப்பாலத்தில் நின்றிருந்தது ஆற்றின் அழகை காண்பதற்காக அல்ல குற்றவாளிகளைக் கண்காணிக்க..
4. Scorpio வில் வந்தவர்கள் டீ மாஸ்டரிடம் பரபரப்பாக கூறியது Police அவர்களை encounterல் போட நெருங்குவதாக..
5. டீ மாஸ்டர் ..... குற்றவாளிகளின் உளவாளி...
6. ராம் வயதில் சிறியவர்...police என்பதற்கான உடல் ரீதியான தகுதிகள் ஏதும் இல்லாதவர் ஆதலால் இவரைக் கண்டு யாருக்கும் இவர் policeசா என்ற சந்தேகம் வராது... gun shootinல் தேசிய அளவில் பலபதக்கங்கள் பெற்றவர்...உடல் தகுதி மட்டும் போதாது காவலர்க்கு அறிவு கூர்மையும் தேவை என்பதை உணர்த்தியவர்...
Written by
Karthik Ganesh..

Comments

Popular posts from this blog

Umblachery Bull

கல்லூரி

புரியாத தருணங்கள்