Two days to go

"Hey Ram phone அடிச்சுன்டே இருக்குடா"... "ம்ம்ம்"...தூக்கக் கலக்கத்தில் ஒருவாறு phone ஐ எடுத்து "ம்ம்ம்..சொல்லு மச்சான்" என்று ஆரம்பித்தான் மறுபுறத்தில் இருந்து "டேய் நாயே இன்னும் கிளம்புளயாடா marriage க்கு இன்னும் two days தாண்டா இருக்கு சீக்கிரம் கிளம்பி வா.. விட்டா marriage அன்னைக்குத்தான் வருவபோல.."  "இல்லை மச்சான் tomorrow morning அங்க இருப்பேன் ok.." என்று பேசி துண்டித்தான்..."Ram coffee flaskla  இருக்கு எடுத்துக்கோ" என்று கூறி குளிக்கச் சென்றால் காவ்யா..brush பண்ணிட்டு kitchenல் நுழைந்த Ram  Coffeeயை எடுத்துக்கொண்டு வந்து hall ல் அமர்ந்து coffee குடித்துக் கொண்டே  mobilil இரவு வந்த whatsapp messsgesக்கு reply அனுப்பிக்கொண்டிருந்தான்...அருகில் காவ்யாவின் mobile ringing ஆகிக்கொண்டிருந்தது..Ram mobile லை எடுத்து ..."சொல்லுங்க Aunty காவ்யா  குளிக்க போயிருக்கா" என்றான்..."ஒன்னும் இல்லைப்பா எப்போ கிளம்புரிங்கனு கேட்கதான் call பன்னேன்"..."அவ்வளவுதான் Aunty இன்னும் 2hrsல கிளம்பிடுவோம்"..."சரிப்பா".."Aunty காவ்யா வந்துட்டா பேசுங்க"..."சொல்லும்மா"...Ram குளிக்கச் சென்றான்...காவ்யா துணிகளை எல்லாம் மடித்து bagல் வைத்துக் கொண்டிருந்தால் இப்பொழுது Ramக்கு phone call அனிதாவிடமிருந்து.. சில வினாடிகள் யோசனைக்குப் பிறகு attend செய்தால் காவ்யா "சொல்லுங்க அனிதா" ..."மாமா இல்லையா"..."அவர் குளிக்கப் போயிறுக்கார்"..."ok வரவும் பேச சொல்லுங்கக்கா".."சரிமா சொல்றேன்"....காவ்யா அனிதாவிடம் மட்டும் எப்பொழுதும் குறைவாகவே பேசுவாள்...


தலையை துவட்டியவாறே வந்த Ram நேராக பூஜையறைக்கு சென்று சுவாமி கும்பிட்டு சிறிது திருநீறு எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு phone எடுத்து அனிதா விற்கு call   செய்து பேசிவிட்டு  hall க்கு வந்தான்...Tvல் songs பாத்துக்கிட்டே சேமியாவை சாப்பிட்டுக்கொண்டிருந்தால் காவ்யா அவள் தட்டை பிடுங்கி சாப்பிட ஆரம்பித்தான் Ram..."போடா loose உனக்கு இதே வேலையா போச்சி" என்று அவன் தலை முடியை செல்லமாக இழுக்க.."விடுடி today is last இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்" என்று கூறிய அடுத்த நொடியில் ஒருவித உற்சாகமில்லாத நிலை அங்கு உண்டானது...ஏதோ இரண்டு பேரும் புரிந்து கொண்டது போல் கிளம்ப தயாராகினர்...


"Ram taxy க்கு சொல்லிட்டியா" என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே கீழே வாசலில் வந்துட்டேன் என்று driver horn அடித்தார்...இருவரும் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினர்...taxi கிளம்பியது..."இது சென்னை Hello fm 106.4 ல் அடுத்து வரும் பாடல் பாண்டவர் பூமியிலிருந்து" என்று சொல்லி முடிக்க பரத்வாஜ் இசையில் "தோழா தோழா" பாடல் ஆரம்பித்தது அதுவரை mobile phoneல் மூழ்கியிருந்த இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து    சிரித்துக்கொண்டனர் காவ்யா Ramன் தோல் மேல் சாய்ந்துகொண்டால் இருவரும் மனதிற்குள் கடந்த கால நினைவுகளை சற்று திரும்பிபார்த்திருக்கக்கூடும்...taxi கோயம்பேடு தனியார் பேருந்து நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தது...


TAT and SRM travels officeக்கு சென்று  tickets   check செய்துகொண்டு திரும்பினான்  Ram ..."காவ்யா bus கிளம்ப இன்னும் 30 minutes இருக்கு உனக்கு வேறு எதுவும் வாங்கனுமா".."இல்லை Ram ஏதும் வேண்டாம்...Thanx..Thank you so much...Thank you very much Ram" "hey loose என்னாச்சு எதுக்கு இத்தனை  Thanx..." "இல்லை Ram சும்மாவே ஒரு பொண்ணும் பையனும் சேர்த்து நடந்தாலே தப்பா பேசுற இந்த societyல 5 years ஒன்னா ஒரே வீட்டுல இருந்திருக்கோம் இதுவரை நீ என்கிட்ட எப்பவுமே தப்பா நடந்துக்கிட்டது இல்லை நானா வந்து உன்கிட்ட என் loveவ சொன்ன போது கூட இல்லை காவ்யா நான் உன் மேல காட்டுகிற அக்கறை அந்த மாதிரி உன்னை நினைக்க வச்சிருக்கு வேறொன்றும்மில்லை நட்பு எப்பவும் நட்புதான் என்று அறிவுறை சொல்லி நல்வழிபடுத்தியிறுக்க... விபத்துல கால் அடிபட்டு இனிமேல் இவளாள நடக்க முடியாதுனு எல்லோரும் சொன்னப்ப நம்பிக்கையாலயே என்னை நடக்க வச்சு எல்லாத்துக்கும் மேல இப்போ எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய பார்த்து கொடுத்திருக்க"  இதற்குமேல் வார்த்தைகள் ஏதும் இல்லாதவளாய் Ramமை ஆறத்தழுவி தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கிளம்புகிறாள்..."அனிதா கொடுத்துவச்சவா...Happy married life Ram!" காவ்யாவின் அன்றைய கடைசி வார்த்தைகள் இவை...


சிறு புன்னகையோடு தனக்கான busல் ஏறுகிறான் Ram...whats app open செய்கிறான்...Two days to go for Ram marriage...என்ற group உதயமாகியிருக்கிறது...party க்கான menu card groupல் வரிசையாக வந்து விழுந்துகொண்டிருக்கிறது....

Kavyaவிடம் இருந்து message..."Thanks for everything..Ram..if reborn is there in the world I would like to born with you as younger sister..☺"

Message from Anitha...பாத்து வாங்க மாமா....❤

Friendship forever...

Written by
Kathik Ganesh...

Comments

Popular posts from this blog

Umblachery Bull

கல்லூரி

புரியாத தருணங்கள்