மனத்திற்கினியாளை கடல் தேவி சாட்சியாக கரம் பிடித்து மனை திரும்பினான் அவன் 45 நாட்கள் ஆனது தடைக்காலம் முடிந்தது படகு பழுது பார்த்து ஆயத்தமானான் கண்ணீரோடு தயங்கி நின்றாள் நங்கை - புன்னகையோடு மெய்தலுவி பிரியாவிடை பெற்றான் பரதவன் சிறு படகு ஆதலால் தனி ஒருவனாய் சென்றான் அருகே வந்தவர்கள் விலகி சென்றனர் நிலம் மறைந்து எங்கும் நீரே காட்சியாய் விரிந்தது எழுந்து நின்றவன் கடல் அன்னையை வணங்கினான் சோவிகளால் முடிச்சிட்டிருந்த சிறு கண்களுடைய செந்நிற வலையை தன் முழு பலத்தால் வீசி எறிந்தான் நேரம் ஆனது இருள் சூழ்ந்தது வானில் நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று யார் அழகு என்று சண்டையிட்டு கொண்டிருந்தன இரவுகளின் அரசி வர தொடங்கினாள் நட்சத்திரங்கள் சண்டையை நிறுத்தி கொண்டன பரதவன் அந்நிலவின் வழியே அவளை நோக்கினான்.., வாரம் 8 ஆனது அந்நாளில் ஆழி சென்றோர் எல்லாம் இந்நாளில் கரை திரும்பலாயினர் நங்கையும் காத்திருந்தாள் கரையில் தன்னவனை எதிர்பார்த்து இன்று நாள் முடிந்தது இது வரை வரவில்லை நாளை அப்பா கண்டிப்பா வருவார் என்று சொல்லி தன் உதரத்தை தடவி கொண்டால் நங்கை நாட்கள் வாரம...