ரோஜா மலர்
ரோஜா மலர்...
ஒரு ரோஜா மலரை பார்த்ததும் பறித்து கையில் ஏந்தி மகிழ்ச்சியடைந்து வாடிய பின்பு தூக்கி எறியும் நமக்கு அந்த ரோஜாவின் கதை தெரியுமா....
ஒரு உயிரியல் மாணவனாய் எழுதுகிறேன்
எப்படி மனித இனமோ அதே போலத்தான் தாவரங்களும் விலங்குகளும்...
இங்கு ரோஜா மலர்களை பார்த்த எத்தனை பேர் ரோஜா காய்களையும் அதன் விதைகளையும் பார்த்து இருப்பீர்கள் என்று தெரியாது...
மனிதகுளத்தின் வளர்ச்சி எப்படி இனப்பெருக்கத்தின் மூலம் நடைபெறுகிறதோ அதே போன்றுதான் தாவரங்களும்...
செடியாகி... இலை பெருத்து... பூப்பெய்து... வண்டு என்னும் தூதுவன் சூல் சேர்த்து வெட்கமாகி... காயாகி விதைகள் என்னும் குழந்தையை கருவில் சுமந்து பழமாகி மழை மற்றும் வெய்யிலில் தன்னை வளைத்து காப்பாற்றி தன் நேரம் வருகையில் வெடித்து சிதறி தன் குழந்தைகளாகிய விதைகளை மன்னில் சேர்க்கும் அந்த தாவர மங்கையை...
பூக்கும் பருவத்திலேயே பிய்த்து எடுப்பது எவ்வளவு பெரிய வலி அவளுக்கு....
#savegirlchild
✒️ கார்த்திக்...
Comments
Post a Comment