நம்பிக்கை என்னும் நங்கூரங்கள்
மனத்திற்கினியாளை கடல் தேவி சாட்சியாக
கரம் பிடித்து மனை திரும்பினான் அவன்
45 நாட்கள் ஆனது தடைக்காலம் முடிந்தது
படகு பழுது பார்த்து ஆயத்தமானான்
கண்ணீரோடு தயங்கி நின்றாள் நங்கை - புன்னகையோடு
மெய்தலுவி பிரியாவிடை பெற்றான் பரதவன்
சிறு படகு ஆதலால் தனி ஒருவனாய் சென்றான்
அருகே வந்தவர்கள் விலகி சென்றனர்
நிலம் மறைந்து எங்கும் நீரே காட்சியாய் விரிந்தது
எழுந்து நின்றவன் கடல் அன்னையை வணங்கினான்
சோவிகளால் முடிச்சிட்டிருந்த சிறு கண்களுடைய
செந்நிற வலையை தன் முழு பலத்தால் வீசி எறிந்தான்
நேரம் ஆனது இருள் சூழ்ந்தது வானில் நட்சத்திரங்கள்
ஒன்றுக்கொன்று யார் அழகு என்று சண்டையிட்டு கொண்டிருந்தன
இரவுகளின் அரசி வர தொடங்கினாள் நட்சத்திரங்கள் சண்டையை நிறுத்தி கொண்டன
பரதவன் அந்நிலவின் வழியே அவளை நோக்கினான்..,
வாரம் 8 ஆனது அந்நாளில் ஆழி சென்றோர் எல்லாம்
இந்நாளில் கரை திரும்பலாயினர்
நங்கையும் காத்திருந்தாள் கரையில் தன்னவனை எதிர்பார்த்து
இன்று நாள் முடிந்தது இது வரை வரவில்லை
நாளை அப்பா கண்டிப்பா வருவார் என்று சொல்லி தன்
உதரத்தை தடவி கொண்டால் நங்கை
நாட்கள் வாரமானது வாரம் மாதங்களானது மன்னவன்
மட்டும் வரவில்லை அவள் விழிகள் கறைகளை விட்டும் அகலவில்லை
நாட்கள் பல சென்றதால் கண்ணீரும் வற்றிப்போயிருந்தன அவள் விழிகளில்
உண்ண மனமில்லை இருந்தாலும் அகத்தே உள்ள ஜீவனுக்காக
உட்கொண்டால்
மாலை வானொலி செய்திகளில் எங்கே தன்னவன் இருப்பு பற்றி ஏதும் செய்தி
வராத என காத்திருந்த நாட்கள் நீள தொடங்கின
மாதம் ஒன்பது ஆனது, அதிகாலை தெருவெல்லாம் ஓலம் - நிறை மாத தெய்வம்
வாசல் தாண்டி ஓடி பார்க்க - பேரழுகையுடன் தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டாள்
மார்பில் குண்டுகள் துளைத்து கிடந்தவன் அவன் இல்லை - வீடு திரும்பினாள் ஏதேதோ
எண்ணங்கள் அவளை சிதைத்து கொண்டிருந்தன
அவர் திரும்பி வருவார் என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள் அதனை அவ்வயிற்றில் இருக்கும் அக்குழந்தையும் உதைத்து ஆமோதித்தது
மாதம் பத்து ஆனது கலங்கரை விளக்கு மேடையில் அமர்ந்து வழக்கம் போல
கரை நோக்கினால் நேரம் 8 ஆனது போலாம்மா என்று அத்தை விழித்தாள்
வீடு திரும்பினர், பரதவன் திண்ணையில் அமர்ந்து இருந்தான் அவள் மயக்கமுற்றாள்
பதறி போனான் பரதவன் மறுநாள் காலை குட்டி தேவதைஅவன் கையில்...
நங்கையின் உச்சி முகர்ந்தான் அவன்.. அவனுக்காக கொஞ்சம் சேர்த்து வைத்திருந்த கண்ணீரை ஆனந்த கண்ணீராய் வெளியேற்றினால் அவள்...
தான் பட்ட துன்பங்களை அவன் வெளிக்காட்ட விரும்பவில்லை... அவளும் அதை வெளிக்கொணர விரும்பவில்லை...
வாழ்க்கை ஆனந்தமானது குட்டி தேவதை வரவால்....
....கார்த்திக் (GK)...
Comments
Post a Comment