குழந்தைகள்
இனிய காலை பொழுது, ராம் கையில் காபியுடன் தன் பால்கனியில் அமர்ந்து தென் மேற்கு பருவ மழையின் இறுதி யாத்திரையை (சாரல்) கவனித்துக்கொண்டிருந்தான். அங்கே ஒரு பெண் குழந்தை சுமார் 4 வயது இருக்கக்கூடும் வீட்டுத் திண்ணையில் நின்றுகொண்டு தாழ்வாரத்தில் விழும் மழை நீரை தன் கைகளால் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தாள். ராம் தன் காபியை கண்ணாடி மேஜையில் வைத்துவிட்டு வேகமாக வீட்டினுள் சென்றவன் தன் கேமிராவை எடுத்துக்கொண்டு மீண்டும் பால்கனி வந்து அந்த அழகு தேவதையை படம் பிடிக்க ஆயத்தமானான். "ஆரம்பிச்சுட்டிங்களா காபி ஆறுது பாருங்க குடிச்சிட்டு அப்புறம் படம் பிடிங்க" என்று அனிதாவும் கையில் காபியுடன் வந்து அருகே நிற்க "காபி ஆறினால் சூடு பண்ணி குடிக்கலாம் but that beautiful moments never come again அனி" என்று ராம் கூற "அப்படி யார படம் பிடிக்கிறிங்க" என்று அனி கேட்க "இங்க வா அங்க பாரு எவ்ளோ அழகா இருக்காள!" என்று அக்குழந்தையை ராம் காமிக்க "wow so cute" என்று சொன்ன அனி சில நொடிகளில் தன்னை அறியாமல் அழ ஆரம்பித்தாள் புரிந்து கொண்ட ராம் அனிதா அருகே சென்று ஒரு தாயைப்போல அரவணைத்துக்கொண்டான் இருவரும் குழந்தையாகிப்போயினர்...
நாளை இருவருக்கும் ஐந்தாவது திருமண நாள்...
Written by
Karthik Ganesh
Comments
Post a Comment