புரியாத தருணங்கள்
ஐப்பசி மாதம் ஒரு புதன் கிழமை காலை வேலை கரு மேகங்கள் மழையை பொழிவிக்க தக்க தருணத்தை நோக்கிக் காத்துக்கொண்டிருந்தன மாதவன் தன் மாமாவையும் அத்தையையும் கூடவே தன் தங்கையையும் அழைத்துக்கொண்டு திண்டுக்கல்லில் உள்ள இராமநாதன் வீட்டிற்கு சென்றான்.
அவர்கள் வீட்டினுள் காலடி எடுத்து வைப்பதற்கும் கருமேகங்கள் மழையைப் பொழிவதற்கும் சரியாக இருந்தது... வாங்க தம்பி நல்ல வேலை மழைல நனையாம வந்து சேர்ந்துட்டிங்க என்று அழைத்த இராமநாதன் தன் வீட்டில் இருந்தோரை மாதவன் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார் இரு குடும்பமும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர். மாதவன் தன் தங்கையை நோக்கி கண் சிமிட்டினான் ஏதோ புரிந்து கொண்டவள் போல் அவளும் கண் சிமிட்டிக்கொண்டாள் சில வினாடிகளில் "அப்புறம் பொண்ண காட்டுவிங்ளா இல்லை" என்று மாதவன் தங்கை சொல்லி முடிப்பதற்குள் தமிழ் பெண்ணிற்கான அத்தனை அழகும் ஒருங்கே கொண்டு முன்னே வந்து இரு கரம் கூப்பி தன் தலையை மெல்ல அசைத்த அந்த நொடியே மாதவன் தன்னை மறந்துவிட்டான் அருகில் இருந்த அத்தை என்னப்பா பொண்ணு பிடிச்சிருக்கா என்று கேட்டவுடன்தான் தன்னை உணர்ந்தான். நான் பொண்ணுட்ட கொஞ்சம் தனியாக பேச வேண்டும் என்றவனை மாமா முறைக்க அதுக்கென்ன பேசுங்க தம்பி என்று பெண்ணின் அம்மா அனுமதி அளித்தார்.
இருவரும் மாடிக்கு சென்றனர் பெண்னோடு ஒரு குழந்தையும் கூட வர இவர்கள் உரையாடுவதற்காகவே வருண பகவானும் கொஞ்சம் இடைவெளி விட்டிருந்தார்.. பாப்பா நான் அக்காட்ட தனியா பேசனும் கொஞ்சம் அங்க போய் நிக்கிறியா என்று கெஞ்சாத குறையாய் கேட்க குழந்தை அக்காவைப் பார்க்க அவள் கண்களால் கட்டளையிட குழந்தை அங்கிருந்து அகன்றாள்.. "ஏங்க என் பேரு மாதவன் என்ன பத்தி எப்படியும் உங்கிட்ட சொல்லியிருப்பாங்க.. நான் இப்போதான் உங்கள முதல் தடவை பார்க்குறேன்.. நான் நினைச்சிறுந்தா கீழேயே உங்கள பிடிச்சிறுக்குனு சொல்லியிறுப்பேன் ஆனால் உங்க முகத்துல ஒரு பதட்டத்தை பார்த்தேன் அதான் உங்ககிட்ட தனியா பேசனும்னு சொன்னேன். உங்களுக்கு இப்ப இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாம இருக்கலாம் அத உங்க வீட்டுல சொல்ல நீங்க சங்கடப்பட்டுட்டு கூட இருக்கலாம்... அதனால நீங்க என்ன பன்றிங்கனா என் போன் நம்பர நோட் பண்ணிக்கங்க நாளைக்கி 12 மணி வரை டைம் எடுத்துக்கங்க ok na மட்டும் செய்தியனுப்புங்க bye.. என்று சொல்லி கீழே வந்து தன் அத்தையிடம் காதில் ஏதோ முனுமுனுக்க உடனே அத்தை "சரிங்கப்பா போய்ட்டு நாளைக்கு போன் பன்றோம்" என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டனர் வருண பகவான் தன் வேலையை தொடர ஆரம்பித்தார்...
மறுநாள் மாதவன் ஏதோ தேர்வு முடிவிற்கு காத்திருக்கும் மாணவனைப்போல பரபரப்பாகக் காணப்பட்டான்.. நிமிடத்திற்கு ஒருமுறையாவது மொபைல் திரையைக் காண மறக்கவில்லை...சரியாக சாப்பிடக்கூட அவனால் முடியவில்லை...
மணி 11:55 ஒரு புதிய எண்ணில் இருந்து மெசேஞ் வர பதட்டத்தோடு open செய்தான் "Sorry" என்ற மெசேஞ் வேறொன்றும் இல்லை.. எதையோ ஒன்றை இழந்ததைப் போன்றதொரு உணர்வு ஏதோ ஒன்று அவனின் தொண்டையை அடைப்பது போன்று இருந்தது...
மணி 11:57 மீண்டும் அதே எண்ணில் இருந்து மற்றொரு மெசேஞ் " I'm in love with You" கைகள் பதறின அவனால் அப்பொழுது வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை..
மணி 12:00 மீண்டும் ஒரு மெசேஞ் " Will you marry me... by Anandhi"
அவ்வளவுதான் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இனிதே நிறைவேறியது...!
சுபம்!
Written by;
Karthik Ganesh
Comments
Post a Comment