A coffee at 65th Km

Tamilnadu to Kerala for a Coffee....
இப்படித்தான் ஆரம்பித்தது அந்த ஞாயிற்று கிழமை, காபி போடா காயவைத்த பால் உள்ளே சென்று சமையலறையை பார்க்கையில் பால் பொங்கி அடுப்பை அனைத்திருந்தது. ஒருவித விரக்தியில் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து 30 நிமிடங்கள் நீந்தி குளித்துவிட்டு மேல் ஏறுவதற்கும் காப்பாளர் இட்லி வாங்கி வருவதற்கும் சரியாக இருந்தது... சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமைதியாக உட்காருகையில் ஏதோ சிந்தித்தவனாய் தன் பைக்கில் வைத்திருந்த இன்சூரன்ஸ் ஆவணத்தை எடுத்து பார்த்தேன் இன்னும் 6 நாட்கள் வேலிடிட்டி இருந்தது. ஹெல்மெட்டய் எடுத்துக்கொண்டு கிளம்பினேன் . சரியாக 13 வது கிலோமீட்டர் ஆலங்குளம் அடைந்த பிறகு 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டேன். மேற்கு நோக்கிய பயணம் ஆதலால் காலை வெயில் எனக்கு ஏதும் களைப்பை ஏற்படுத்தவில்லை.. அது ஜூன் மாதம் ஆதலால் மேற்கு காற்று சற்று பலமாக வீச பைக் 40 கிலோமீட்டர் வேகத்திலேயே சென்று கொண்டு இருந்தது. தென்காசியில் இருந்து இலஞ்சி சாலையில் பயணிக்கையில் பச்சை பட்டுடுத்திய திரிகூட மலையில் வெண் மேகங்கள் தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தன. அவ்வளவு தொலைவில் இருந்தும் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் விழும் அந்த காட்சி கண்ணை பறித்தது.... காற்று கொஞ்சம் குறைந்திருந்தால் பைக்கும் 80ல் பறந்து கொண்டிருந்தது செங்கோட்டையை கடந்து புளியரை செக் போஸ்ட் கடக்கையில் மலைப் பாதை ஆரம்பித்தது பெரிய வாகனங்கள் அந்த "S" வளைவை கடக்க திணறிக் கொண்டிருந்தன ஆனால் கேரளத்து வாகன ஓட்டிகளை பாராட்டியே ஆக வேண்டும் சர்வ சாதாரணமாக அந்த வளைவுகளை கடந்து செல்கின்றனர் அதுவும் அனாயாசமாய்.. பைக் 2 மற்றும் 3 வது கியர்களிலே திணறி மலை ஏற சரி நண்பனுக்கு சிறிது ஓய்வு கொடுக்கலாம் என்று ஒரு ஓரமாக சிறிது நேரம் வண்டியை நிறுத்திவிட்டு மலை சாலையின் ஓரமாக அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு சுவரில் ஏறி மலையின் கீழ் தெரியும் நிலங்களையும் நகரங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன் அங்கிருந்து தென்காசி கோபுரத்தை தரிசித்துவிட்டு மேலும் கிளம்பலானேன் .. அடர்ந்த காடுகள், குறுகலான சாலைகள், நோ நெட்ஒர்க் கவரேஜ் எங்கு நோக்கினும் தேக்கு மற்றும் ரப்பர் மரக்காடுகள், வழியில் ஏதேனும் வாகன பழுது ஏற்பட்டாலும் மிகவும் சிரமம் இதெல்லாம் தாண்டி ஒரு வழியாக ஆரியங்காவு பாலருவி சுற்று சூழல் மையத்தை அடைந்துவிட்டேன்..ஒருவழியாக அனுமதி சீட்டு வாங்கியாச்சு இனி 2.5 கிலோ மீட்டர் அடர் வனத்தினுள் பயணிக்க வேண்டும்... திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து என்னை நனைக்க ஆரம்பித்தது நானும் நனைந்து கொண்டே வாகனத்தை செலுத்த ஆரம்பித்தேன்... பாலருவியில் இருந்து வரும் நீர் ஓடையில் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருந்தது..... சாலைகளின் அமைப்பு ரோலர் கோஸ்டர் போல ஏற்ற இறக்கமாக சென்று கொண்டு இருந்தது...ஒரு வழியாக அருவியை அடைந்தாயிற்று..... கேரள அரசுக்கு சொந்தமான ஒரு உணவகம் அங்கு இருந்தது... பயணம் எப்படி இருப்பினும் தாம் வந்த காரியம் நடக்க வேண்டும்.... ஆம் இதோ இப்பொழுது "சேட்டா ஒரு காப்பி"....... பெற்றுக்கொண்டாயிற்று....
அருவிக்கு செல்ல சில மீட்டர்கள் நடக்க வேண்டும்...
கையில் காப்பி மற்றும் குடை.... இதமான சாரல்... சூரிய வெளிச்சம் கூட தரையில் படாத அடர்ந்த காடு.... புரியாத மொழி.... பழகாத முகங்கள்... கொஞ்சம் தவறினாலும் பாறைகளில் கால்கள் மாட்டிக்கொள்ளும்... இவை எல்லாம் கடந்து அந்த அருவியை அருகில் சென்று பார்க்கையில் ஏற்படும் பிரமிப்பு..... இவை எல்லாம் அன்று எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது ...... My dearest Yamaha YBR.... #Coffee
#பயணங்கள் முடிவதில்லை.....




From Karthik's traveling diaries 2011-2014
Photo credit: Google

Comments

Popular posts from this blog

Umblachery Bull

கல்லூரி

புரியாத தருணங்கள்