எதிர்பார்ப்பு
நீ யார் என்று எனக்கு தெரியாது...
நீ எங்கு இருக்கின்றாய் என்று எனக்கு தெரியாது...
நீ எப்படி இருக்கின்றாய் என்று எனக்கு தெரியாது...
ஏன் உன் பெயர்கூட இதுவரை எனக்கு தெரியாது...
ஆனால் நம் இருவரும் விரல் கோர்த்து செல்லும் அத்தருணத்திற்காகவும் நம் பாத சுவடுகள் தன் மீது விழும் அந்த நாளுக்காகவும் காத்துக்கிடக்கின்றது இந்த கடற்கரை...
வெகு தொலைவில் இல்லை நாம் சந்திக்கப்போகும் அந்த நாள்...
காத்திருக்கிறேன் உன்னைப் போன்றே நானும் அந்த நாளுக்காக...🌷💍.....#கார்த்திக்
Comments
Post a Comment