பள்ளியில் ஒருநாள்
பெலகொண்டபள்ளி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் CSR நடவடிக்கைகளை ஆய்வு செய்ய சென்ற போது எடுத்த படம்... அரசாங்க தொடக்கப்பள்ளிதான் ஆனால் கற்ப்பிக்கும் முறை சர்வதேச பள்ளிகளுக்கு இணையாக உள்ளது. இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு பாடத்துடன் நன்நெறிகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அதில் இடைவேளை மணி அடித்தவுடன் அனைத்து வகுப்பு குழந்தைகளும் யாரும் சொல்லாமலேயே பள்ளி வளாகத்தில் இருக்கும் குப்பைகளை அகற்றி கைகளைக்கழுவும் முறையும் வகுப்பறைக்குள் புதிதாக ஒருவர் வருகிற பொழுது அவர்களை பாடலுடன் வரவேற்கும் முறையும் என்னை மயிர் கூச்செறிய செய்த தருணங்கள்....
Comments
Post a Comment