மலராத மொட்டுகள்
வெள்ளிக்கிழமை பள்ளி சென்று வீடு திரும்பினாள...
சாவடி பெருசுகள் பாவமாய் நோக்கின அவளை...
முத்து மாலையம்மன் கோவில் குழாய்ல பாட்டு போடல இன்னக்கி...
ஒன்றும் புரியாதவளாய் கடந்தாள் தெருவை...
ஓ என்ற சப்தம் மட்டும் எங்கிருந்தோ கேட்க அனிச்சையாய் ஓடின அவள் கால்கள்...
பீரிட்டு அழுதாள்... அவள் அன்னையின் நிலை கண்டு...
"நாளை பள்ளி லீவு என் மவள கோயிலுக்கு சாமி பாக்க கூட்டு போவனும்னு சொன்ன உன் அம்மை... இன்னைக்கி உன்னை விட்டு அவள் மட்டும் போயிட்டாளே" என அவளை மேவீட்டு ஆச்சி கட்டி அழுக...
அவளோ அதிர்ச்சியில் உறைந்து தான் போனாள்...
சொந்த பந்தமெல்லாம் எட்டாம் நாளோடு போக...
அப்ப அப்ப குடிச்ச அப்பா இப்ப முழு நேர குடிகாரனா மாறிப்போக...
பத்தாம் வகுப்பை பாதியில் நிறுத்தி
பீடியை சுற்றுகிறாள் வயிற்றை நிறைக்க...
கார்த்திக்...
*Based on true story - Tirunelveli district
Comments
Post a Comment