Cafe காதல்
கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிட்டேன் எனது நல்ல நேரம் அந்த பால்கனி ஓர டேபிள் காலியாக இருந்தது. சென்று அமர்ந்தவுடன் "Welcome to La Cafe sir, can I have your order?" என்று waiter வந்து கேட்க பழக்கதோசத்தில் ஒரு கடுங் காப்பி என்று உள்நாக்கு வரை வந்த வார்த்தை மாறி One Hot Black Coffee with little salt topping என்று வெளியே வர Thanks sir please wait என்று மறுவார்த்தை கூறி நகன்றார் அந்த waiter.
மணி மாலை 06:45 இருக்கும் கடல் இருள் சூழ ஆரம்பித்தது, சாலையோர மஞ்சள் நிற halogen வெளிச்சத்தில் கடற்கரையை பார்க்கையில் கடல் ஏதோ தங்கத்தை உருக்கி அதனை கடற்கரையில் மோதி விளையாடுவது போல் காட்சியளித்தது. இதனை பார்த்துக்கொண்டிருக்கும் போது மனதினுள் அவள் எப்பொழுது வருவாள் என்ற எண்ணமும் எழாமல் இல்லை. திடீரென எங்கிருந்தோ வந்த மேகங்கள் சிறிது நேரம் மழையைத் தூரிய போது எங்கே அவள் வராமல் போய்விடுவாளோ என்று என் மனம் பட்ட வலியை அவள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை...
என் மேஜையை சுற்றி இருந்த மேஜைகள் எல்லாம் இருவர்களாலும் கொஞ்சல்களாலும் நிரம்பியிருக்க என்னைப் பார்த்து அந்த மேஜேகளைத் துடைக்கும் வடநாட்டு இளைஞர் சிரிப்பதில் எனக்கு ஏதும் ஆச்சரியமில்லை...
மணி 7 ஆனது coffee இன்னும் வரவில்லை அவளும்தான். திடீரென cafe ன் விளக்குகள் அணைக்கப்பட்டு ஒவ்வொரு மேஜையிலும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன... ஒரு German இசைக் கலைஞர் Miles Davis ன் So what Jazz இசையை தன் horn ல் இருந்து இசைக்க தொடங்கினார்...
ஒருவழியாக நான் order செய்த Hot Black coffee வந்துவிட்டது, கேட்பதற்கு முன்பே முந்திக்கொண்ட waiter "Sorry for the Delay sir" என்று பாவப்பட்ட பிள்ளை போல் கேட்க நான் சிரித்துக் கொண்டேன்.
என் மனதின் வலி அந்த வருண பகவானுக்கும் கேட்டிருக்கும் போல சிறிது நேரம் மேகத்தை விளக்கி வைத்திருந்தான்.
சரி coffee குடிக்கலாம் என்று நினைக்கையில் cafe முழுவதும் மெழுகுவர்த்திகள் வெளிச்சத்தையும் தாண்டி ஒரு பொன்னிறம் ஊடுருவி பாய்ந்தது... அங்கிருந்தவர்களெல்லாம் அவரவர் மொழியில் ஆச்சரியமடைய என் மெய் சிலிர்த்து தான் போனது அச்சமயம்.. பார்த்து பல வருடங்கள் இருக்கும் இருந்தும் இன்றும் அவள் தன்மை மாறாமல் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறாள்.... ஆம் அவள் வந்துவிட்டாள் இருண்டு கிடந்த கடல் இப்பொழுது வெளிச்சம் கொண்டது என்னவள் "வெண் நிலா" வரவால்....
அவள் அழகை நானும் படம் பிடித்துக்கொண்டேன் coffee குடித்துக்கொண்டே பல்வேறு கோணங்களில்...
வந்தவளை எங்கே நான் கூட்டிக்கொண்டு போய் விடுவேனோ என்ற அச்சத்தில் சில நிமிடங்களிலேயே தன்னுள் மறைத்துக் கொண்டான் அந்த வருணனின் அடிமை முகில் (☁️)
I Love U and I Miss U Nila (The Super Moon) if possible we will meet on
December 6, 2052.
☕💔🌕
Written by;
Karத்திக் கணேsh
Comments
Post a Comment